Home /News /national /

சுதந்திர தேவி கண்ணீர் வடிக்கிறாள்.. கருக்கலைப்பு தீர்ப்பு குறித்து ப.சிதம்பரம் வேதனை

சுதந்திர தேவி கண்ணீர் வடிக்கிறாள்.. கருக்கலைப்பு தீர்ப்பு குறித்து ப.சிதம்பரம் வேதனை

காங்கிரஸ் எம்பி ப சிதம்பரம்

காங்கிரஸ் எம்பி ப சிதம்பரம்

அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 50 ஆண்டுகளாக அந்நாட்டில் இருந்து வந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம் அந்நாட்டு பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை கிடையாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் அங்கு கருக்கலைப்பு சட்ட விரோதம் என்ற வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக அந்நாட்டில் இருந்து வந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை, அரசியல் அமைப்பு உரிமை என்று வழங்கிய தீர்ப்பு இந்த புதிய தீர்ப்பின் மூலம் செல்லாமல் ஆகியுள்ளது.

    இந்த புதிய தீர்ப்புக்கு பல தரப்பிலிருந்தும் கடும் கண்டம் எழுந்துள்ளது. மிகவும் பிற்போக்குத்தனமான பார்வை கொண்ட தீர்ப்பு எனவும், நவீன ஜனநாயகத்தில் பெண்களின் அடிப்படை உரிமையை கேள்வி எழுப்பும் தீர்ப்பு எனவும் பலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப சிதம்பரம் ட்விட்டர் கவலையுடன் ட்வீட் செய்துள்ளார். அதில், 'நீங்கள் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், அந்த சிலையின் கண்ணங்களில் கண்ணீர் வழிந்து ஓடுவது தெரியும். இன்றைய தினம் சமத்துவம், சுதந்திரம், தனி மனித உரிமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கு மோசமான நாள். குறிப்பாக பெண்களுக்கு கவலைக்குரிய நாள்.

     



    தேவை இல்லை என கருதும் குழந்தையை, பாலியல் வன்புணர்வு, குடும்ப உறுப்பினரின் பாலியல் வன்கொடுமை, தன்னால் குழந்தையை வளர்க்க முடியாது என்ற சூழலை அறிந்த ஒரு தாயார் ஒரு குழந்தையை எவ்வாறு வளர்க்க முடியும்.

    இதையும் படிங்க: இளம்பெண் மீதான மோகத்தால் மோசடி வலையில் சிக்கிய வங்கி மேலாளர்.. வாடிக்கையாளர் பணம் ரூ.5.7 கோடி அபேஸ்!!

    அந்த குழந்தைக்கு முறையான அன்பு கிடைக்குமான என்ன. இதை நினைத்து பாருங்கள். ஒரு நாடு நம்பிக்கையற்று பிளவு பட்ட கருத்துக்களில் உள்ள நிலையில், சில நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட முன்முடிவுகளின் காரணமாக இது போன்ற தங்களின் கருத்துக்களை மக்களிடம் திணிக்கிறார்கள். அரசியல் சாசன உரிமை என்பது நீதிமன்றங்களால் தரப்படுவது அல்ல. இவை மக்களின் பிறப்புரிமை. இந்த உரிமைகளை நீதிமன்றம் பறித்துக்கொள்ள முடியாது' என ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Abortion, Chidambaram

    அடுத்த செய்தி