Home /News /national /

உ.பி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த 3வது அமைச்சர்.. கலக்கத்தில் பாஜக!!

உ.பி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த 3வது அமைச்சர்.. கலக்கத்தில் பாஜக!!

UP Polls: பாஜகவில் இருந்து மொத்தமாக 8 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

UP Polls: பாஜகவில் இருந்து மொத்தமாக 8 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

UP Polls: பாஜகவில் இருந்து மொத்தமாக 8 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் அமைச்சரவையில் அங்கம் வகித்த 2 அமைச்சர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில், இன்று மூன்றாவது மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தரம் சிங் சைனி நான்கு முறை நாகுட் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் ஆவார். இவர் பாஜகவில் இருந்து தான் ஒருபோதும் விலகமாட்டேன் என்று நேற்றைய தினம் உறுதி அளித்த நிலையில், இன்று பதவி விலகியுள்ளார்.

    உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, இரண்டாவது அமைச்சராக தாரா சிங் சவுகானும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மேலும் படிக்க: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச்சென்ற பொதுமக்கள்!

    தங்களது ராஜினாமா குறித்து இரண்டு அமைச்சர்கள் அளித்த விளக்கத்திலும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் மீதான இந்த அரசின் அடக்குமுறை அணுகுமுறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால், மனவேதனை அடைந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர்.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள உத்தரபிரதேச தேர்தலுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத் அணியில் இருந்து 2 இதர பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் விலகிய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, மூன்றாவதாக மேலும் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

    இதையடுத்து, பாஜகவில் இருந்து மொத்தமாக 8 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சர்கள் பதவி விலகும் போதும், அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்.

    அந்தவகையில், தரம் சிங் சைனியுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Also read:  Corona | இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்.. சீனாவில் கெடுபிடி - வீடியோ
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, Uttar pradesh

    அடுத்த செய்தி