Home /News /national /

கட்டுக்கடங்காத கொரோனா: உதவி கேட்ட மகாராஷ்டிரா - மும்பை சென்ற கேரள மருத்துவக் குழு

கட்டுக்கடங்காத கொரோனா: உதவி கேட்ட மகாராஷ்டிரா - மும்பை சென்ற கேரள மருத்துவக் குழு

கேரள மருத்துவக்குழு

கேரள மருத்துவக்குழு

கொரோனா நோய்த்தடுப்பு சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து 100 பேர் கொண்ட மருத்துவக்குழு மும்பை சென்றுள்ளது.

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 1,90,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் மட்டும் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,286 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா திணறி வருகிறது.

    இந்தநிலையில், மகாராஷ்டிர மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கடிதம் மூலம் கேரள அரசிடம் உதவி கோரியிருந்த நிலையில், கேரள மருத்துவக்குழு அங்கு சென்றுள்ளது.

    மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட 100 பேர் குழுவுக்கு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் தலைமையேற்றுள்ளார்.

    கேரளாவில் 1,269 பேருக்கு மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 9 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்தியதன் மூலம் உலக அளவில் கேரளா கவனம் ஈர்த்துள்ளது.

    Also read... ஆய்வாளருக்கு கொரோனா தொற்று: 2 நாட்களுக்கு ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் மூடல் 






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி