ஹோம் /நியூஸ் /இந்தியா /

திகார் சிறையில் ஓவியம் பழகும் நிர்பயா கொலைக் குற்றவாளி!

திகார் சிறையில் ஓவியம் பழகும் நிர்பயா கொலைக் குற்றவாளி!

திகார் சிறை (கோப்புப் படம்)

திகார் சிறை (கோப்புப் படம்)

சக சிறைக் கைதிகளுக்கு படிப்பது, எழுதுவது மற்றும் அடிப்படைக் கணிதம் ஆகியவற்றை வினய் சர்மா சொல்லிக் கொடுக்கிறார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திகார் ஜெயலில் தண்டனை அனுபவித்துவரும் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி வினய் சர்மா, மன அமைதிக்காக ஓவியம் வரைந்துக் கொண்டிருக்கிறார்.

  இந்தியாவையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் வினய் சர்மா. இவர், கடந்த இருவருடங்களுக்கு முன்னர் மன அழுத்தத்தின் காரணமாக, தற்கொலைக்கு முயற்சி செய்தார். அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட அவர், தூக்கு போடுவதற்கு முயற்சி செய்தார்.

  நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் வினய் சர்மா மட்டும் பள்ளிக் கல்வியை முடித்தவர். சிறை தண்டனை அனுபவித்து வரும் வினய் சர்மா, அங்கிருந்தவாறே டிப்ளமோ முடித்துள்ளார். இதுகுறித்து  சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து பாடத்தில் வினய் சர்மா டிப்ளமோ முடித்துள்ளார். ஆறு மாத கால படிப்பை அவர் இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்தார்’ என்றனர். டிப்ளமோ படிப்பை முடித்த வினய் சர்மா, சிறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

  அவர்தான், சிறைக் கைதிகளுக்கு வாசிப்பு சார்ந்து விஷயங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். சக சிறைக் கைதிகளுக்கு படிப்பது, எழுதுவது மற்றும் அடிப்படைக் கணிதம் ஆகியவற்றை வினய் சர்மா சொல்லிக் கொடுக்கிறார். மேலும், சிறை வளாகத்தில் இருக்கும் அறிவிப்பு பலகையில் தினம் ஒரு சிந்தனையை எழுதுகிறார். சமீபத்தில், அவர் ‘ஒருவேளை நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை  கொண்டு வந்தால், நம் குடும்பத்திலிருந்து வரும் மாற்றம் சமூகத்தை மாற்றும்’ என்று எழுதியுள்ளார்.

  படிப்பைத் தவிர, வினய் சர்மா தற்போது ஓவியம் வரைவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். திகார் சிறையில் லலித்கலா அகாடமி நடத்திய ஒரு வார கால ஓவியப் பயிற்சியில் வினய்யும் பங்கேற்றுள்ளார். வினய் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைப்பதற்காக வெளியே கொண்டு செல்லப்பட்டன.

  பின்னர், அந்த ஓவியங்கள் திகார் சிறைக்கு மீண்டும் எடுத்து வரப்பட்டன. இதுகுறித்து ஓவியப் பயிற்சி ஆசிரியர் சுஷ்மா யாதவ் கூறுகையில் ‘வினய், அனுமன் படத்தை வரைந்தார். சிறைக்குள் அவர் தவிப்பதையே படமாக வரைந்திருந்தார்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Prison