குஜராத், முசாஃபர் கலவர பாடத்திட்டங்கள் நீக்கம்! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் போர்கொடி

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி அமைப்பு டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பாடத் திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது.

news18
Updated: August 3, 2019, 9:17 PM IST
குஜராத், முசாஃபர் கலவர பாடத்திட்டங்கள் நீக்கம்! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் போர்கொடி
டெல்லி பல்கலைக்கழகம்
news18
Updated: August 3, 2019, 9:17 PM IST
டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பாடத் திடங்கள் ஆர்.எஸ்.எஸ், அகில பாரதிய வித்யார்த் பரிஷத் அமைப்புகளின் ஆதரவுள்ள தேசிய ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி அமைப்பால் கல்விமுறையற்று அரசியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்புக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘ஜூலை 15-ம் தேதி கல்வி சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி அமைப்பு டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பாடத் திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. டெல்லி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் ஆங்கில ஆசிரியர்களான நாங்கள், இந்த பாடத்திட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளோம். கல்வி முறையற்று அரசியல் ரீதியான தாக்குதல் பாடத்திட்டத்தின் மீது நடைபெற்றுள்ளது.


ஆங்கிலப் பாடத்திட்டம் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக 40 மேற்பட்ட கல்லூரிகளில், 3,000 மணி நேரங்கள் அந்தப் பாடத்துக்காக செலவழித்துள்ளன. அத்தகைய பாடப்பகுதிகளில் பல்கலைக்கழகத்திலுள்ள சில அரசியல் குழுக்களால் தவறாக மாற்றப்படுவதும், கைவிடப்படுவதும் கல்வி குறித்து மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அதை நினைத்து நாங்கள் கலங்கி நிற்கிறோம். கல்லூரிகள் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் ஆசிரியர்களான எங்களுக்கு இன்னமும் பாடத்திட்டங்கள் வழங்கப்படாமல் உள்ளது. அதனால், மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது’என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த ஏ.பி.வி.பி மற்றும் என்.டி.டி.எஃப் அமைப்பினர், ‘2002 ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வகுப்பு கலவரம் மற்றும் 2013-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடைபெற்ற கலவரம் குறித்த பகுதிகள் பாடத்திட்டங்களில் இடம் பெறுவது ஏற்புடையதுஅல்ல’ என்று தெரிவித்தனர்.

Loading...

Also see:

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...