ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாய்ப்பாடு ஒப்பிக்காத மாணவனின் கையில் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டை : ஆசிரியர் செய்த கொடூர செயல்!

வாய்ப்பாடு ஒப்பிக்காத மாணவனின் கையில் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டை : ஆசிரியர் செய்த கொடூர செயல்!

மாணவரின் கையில் ட்ரில் போட்ட மாணவர்

மாணவரின் கையில் ட்ரில் போட்ட மாணவர்

வாய்ப்பாடு ஒப்பிக்காததால் 5ஆம் வகுப்பு மாணவனின் கையில் ஆசிரியர் டிரில் செலுத்திய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

வகுப்பறையில் மாணவர்களை ஆசிரியர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கும் சம்பவங்கள் இன்றும் சில இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கணித வாய்ப்பாடு முறையாக ஒப்பிக்கவில்லை என்று அவரது ஆசிரியர் டிரில் இயந்திரத்தை பயன்படுத்த மோசமான தண்டனை வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரேம்நகர் என்ற பகுதியில் மாடல் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிசாமாவ் என்ற பகுதியைச் சேர்ந்த சிறுவன் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற நவம்பர் 25ஆம் தேதி வகுப்பில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு என பிரத்தியேக பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், இந்த சிறுவனுக்கு கணித வாய்பாடு பயிற்சியை அனுஜ் என் ஆசிரியர் தந்துள்ளார். பயிற்சிக்குப் பின்னர் அந்த 5ஆம் வகுப்பு சிறுவனை 2ஆம் வாய்ப்பாடு ஒப்பிக்கச் சொல்லி ஆசிரியர் அனுஜ் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுவன் வாய்ப்பாட்டை ஒழுங்காக ஒப்பிக்கவில்லை. எனவே, ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்த ட்ரில் இயந்திரத்தைக் கொண்டு மாணவனின் கையில் ஓட்டை போட்டு காயமாக்கி தண்டனை வழங்கியுள்ளார். ஆசிரியரின் இந்த கொடூர செயலைப் பார்த்து சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு படித்த மற்றொரு மாணவன் இதை கவனித்து பிளக்கை உடனடியாக பிடுங்கியுள்ளார். இல்லையென்றால் நிலைமை மேலும் விபரீதமாக மாறியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ந்த சம்பவத்தை ஆசிரியர் உயர் அதிகாரிகளிடம் மறைத்த நிலையில், மாணவனின் பெற்றோருக்கு உண்மை தெரிய வரவே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து விவகாரம் பூதாகரமாகவே, ஆசிரியரை சஸ்பெண்ட் செய்த நிர்வாகம், விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

First published:

Tags: Punishment, School student, School Teacher, Uttar pradesh