ஹோம் /நியூஸ் /இந்தியா /

''முஸ்லீம்னா தீவிரவாதியா? உங்க மகனை அப்படி சொல்வீங்களா?'' பேராசிரியரை கேள்விகளால் அலற வைத்த மாணவர்!

''முஸ்லீம்னா தீவிரவாதியா? உங்க மகனை அப்படி சொல்வீங்களா?'' பேராசிரியரை கேள்விகளால் அலற வைத்த மாணவர்!

மாணவரை தீவிரவாதி என அழைத்த ஆசிரியர்

மாணவரை தீவிரவாதி என அழைத்த ஆசிரியர்

மாணவரை தீவிரவாதி என ஆசிரியர் அழைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கல்லூரி பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவரை தீவிரவாதி என்று கூறிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் இந்த 45 நொடிகளே கொண்ட இந்த வீடியோவில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்து வருகின்றனர். அப்போது வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்த பேராசிரியர் நீல நிற சட்டை அணிந்திருந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவரை, நீ முஸ்லிம்; எனவே தீவிரவாதி என்ற அர்த்தத்தில் பேசினார்.

ஆசிரியரின் இந்த கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர் இவ்வளவு பேருக்கு முன்னாள் என்னை நீங்கள் எப்படி இவ்வாறு அழைக்கலாம். இது வகுப்பறை நீங்கள் ஒரு ஆசிரியர், இப்படி பேசலாமா என்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார். உடனடியாக சுதாரித்த ஆசிரியர், நீ சிறுவன் எனது மகன் போன்றவன். எனவே ஜாலியாகத்தான் அப்படி அழைத்தேன் என்றார். அதற்கு அந்த மாணவன், இது எப்படி ஜாலியாகும். ஒரு முஸ்லிமாக நாள்தோறும் இப்படிதான் நான் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஒருவரின் பெயரை வைத்து எப்படி தீவிரவாதி என்று கூறுவீர்கள் என்று பதில் தெரிவித்தான்.

உடனே ஆசிரியர் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். நீங்கள் மன்னிப்பு கேட்பதால் எதுவும் மாறாது. நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர் என்பதை இது பிரதிபலிக்கிறது என்று மாணவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த ஆசிரியருக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பேராசிரியருக்கு வகுப்புகள் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Muslim, Viral Video