தெலங்கானாவில் காங்கிரஸை ஆதரிக்கும் தெலுங்கு தேசம் கட்சி!

டி.ஆர்.எஸ் மற்றும் பாஜகவுக்கு போட்டியாக தெலங்கானாவில் களம் கண்டுள்ள தெலங்கானா காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸை ஆதரிக்கும் தெலுங்கு தேசம் கட்சி!
சந்திரபாபு நாயுடு
  • News18
  • Last Updated: March 27, 2019, 1:13 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தங்களின் முழு ஆதரவு என்று தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. 

2019 மக்களவைத் தேர்தலில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, தெலங்கானா மாநிலத்தில் போட்டியிடப் போவதில்லை என முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜகவுக்கு இடையே வரும் மக்களவைத் தேர்தலில் பலத்த போட்டி நடைபெறவுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு, தெலுங்கு தேசம் கட்சி மால்காஜ்கிரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மால்காஜ்கிரி தொகுதியின் எம்.பி.,யான மல்லா ரெட்டி, அதன் பிறகு டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்துவிட்டதால், வரும் மக்களவைத் தேர்தலில், தெலங்கானாவில் நேரடியாக போட்டியிடும் முடிவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கைவிட்டது.

ஆனால், டி.ஆர்.எஸ் மற்றும் பாஜகவுக்கு போட்டியாக தெலங்கானாவில் களம் கண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

Loading...

Also See..

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...