முகப்பு /செய்தி /இந்தியா / WFH-ல் இருந்து மீண்டும் அலுவலக வேலைக்கு திரும்பும் ஐடி நிறுவனங்கள்!

WFH-ல் இருந்து மீண்டும் அலுவலக வேலைக்கு திரும்பும் ஐடி நிறுவனங்கள்!

வீட்டில் இருந்தே வேலை

வீட்டில் இருந்தே வேலை

டிசிஎஸ் மட்டுமல்லாது விப்ரோ உள்ளிட்ட மேலும் பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைக்க உள்ளன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வொர்க் ஃபிரம் ஹோம் எனும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறையில் பணியாற்றி வந்த ஐடி ஊழியர்களை தற்போது அந்நிறுவனங்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு வருமாறு அழைத்து வருகின்றன.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் சூழல் காரணமாக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்தன. முதல் அலை, பின்னர் இரண்டாம் அலை என சுமார் ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதால், தற்போது இயல்பு நிலை எட்டிப்பார்க்கும் நிலை உள்ளது.

பல்வேறு தொழில்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் தகவல் தொழில்நுட்பத்துறையினரும் வீட்டில் இருந்து பணியாற்றிய தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) வீட்டில் இருந்து பணிபுரியும் முறைக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியுடனோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தோ ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்க டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது.

Also Read: ஒரே நாளில் ரூ.600 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை; ஓலா நிறுவனம் புதிய புரட்சி!

18 மாத வீட்டில் இருந்து பணியாற்றும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில் தங்களில் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்து கொண்டுள்ளது. 2020ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் 96% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர். மேலும் 2025ம் ஆண்டில் இருந்து 25% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில் இருப்பார்கள் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் அலுவலகத்துக்கு ஊழியர்களை அழைப்பது பல்வேறு காரணங்களை பொறுத்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது, பணியாளரின் வசிப்பிடம், அப்பகுதியில் கொரோனா நிலவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டே ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் பிற ஊழியர்களை ஆபத்தில் தள்ள முடியாது எனவும் கூறுகின்றனர்.

Also Read:  ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள்: நிலைப்பாட்டை மாற்றிய மகாராஷ்டிர அரசு!

தற்போதைய நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தின் 90% ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனவும் மிஞ்சம் இருப்பவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரே அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள் என கூறினர்.

டிசிஎஸ் மட்டுமல்லாது விப்ரோ உள்ளிட்ட மேலும் பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைக்க உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TCS, Wipro, Work From Home