• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ராமர் கோவில் கட்டும் அமைப்புக்கு 80G-இன் கீழ் வரிவிலக்கு.. பாபர் மசூதி கட்டும் அமைப்புக்கு அளிக்காதது ஏன்? - ரவிக்குமார் எம்.பி.,

ராமர் கோவில் கட்டும் அமைப்புக்கு 80G-இன் கீழ் வரிவிலக்கு.. பாபர் மசூதி கட்டும் அமைப்புக்கு அளிக்காதது ஏன்? - ரவிக்குமார் எம்.பி.,

எம்.பி ரவிக்குமார்

எம்.பி ரவிக்குமார்

  • Share this:
    ‘பாபர் மசூதி கட்டும் அமைப்புக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன்? ‘ என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார் “ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு வருமானவரி சட்டம் 80G இன் கீழ் ஏற்கனவே வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசு, அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள ‘ இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷனுக்கு ‘ இன்னும் வரிவிலக்கு அளிக்கவில்லை. இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” என தனது நோட்டீஸில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்னும் அறக்கட்டளை, ராமர் கோவில் கட்டுமானத்துக்காக உருவாக்கப்பட்டது.

    https://twitter.com/WriterRavikumar/status/1360062114191212544

    ரவிக்குமார் எம்.பி.,


    கவன ஈர்ப்பு நோட்டீஸில், “விதி 197-இன் படி, நடைமுறை மற்றும் வணிக நடப்பின் விதிகளின்படி, நிதித்துறை அமைப்பின் கவனத்தைத் கோரும் நான், இந்த பாகுபாட்டுக்கான காரணத்தைக் கோருகிறேன் என ரவிக்குமார் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: