முகப்பு /செய்தி /இந்தியா / Tauktae Cyclone: தென்கிழக்கு அரபிக்கடலில் டவ்-தே புயல் - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மழை

Tauktae Cyclone: தென்கிழக்கு அரபிக்கடலில் டவ்-தே புயல் - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மழை

டவ்-தே புயல்

டவ்-தே புயல்

டவ் - தே புயலானது நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என்று  தகவல் தெரிவிக்கப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' புயலால், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்றைய தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு டவ் - தே என வானிலை மையம் பெயரிட்டுள்ளது.

டவ் - தே புயலானது நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என்று  தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 18-ம் தேதி, டவ் - தே புயல் குஜராத் கடல் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Cyclone