• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா குழுமம்- விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா குழுமம்- விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    மத்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாக முயன்றுவருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

    பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கி விட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ந் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து.

    இந்த நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் மற்றும் மனி கண்ட்ரோல் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜே.ஆர்.டி டாடாவில் 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத்தான் மத்திய அரசு 1953-ம் ஆண்டு நாட்டுடமையாக்கியது. இந்தநிலையில், தற்போது 67 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விமான நிறுவனத்தை டாடா மீண்டும் கைப்பற்றுகிறது.

    இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஏர் இந்தியா தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது. ஏர் இந்தியா தனியார்மயமாவது குறித்து முடிவு எடுத்த பிறகு இதுகுறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்’ என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுவரையில் ஏலத்தில் டாடா குழுமம் தான் அதிகபட்ச விலைக்கு கோரியுள்ளது. இதுதொடர்பாக அமித்ஷா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: