ஹோம் /நியூஸ் /இந்தியா /

களமிறங்கும் எலெக்ட்ரிக் பஸ்கள்.. சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநில அரசுகள் எடுக்கும் சூப்பர் ப்ளான்ஸ்!

களமிறங்கும் எலெக்ட்ரிக் பஸ்கள்.. சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநில அரசுகள் எடுக்கும் சூப்பர் ப்ளான்ஸ்!

எலெக்ட்ரிக் பேருந்துகள் விநியோகம்

எலெக்ட்ரிக் பேருந்துகள் விநியோகம்

அண்மையில் டெல்லியில் 1,500 எலெக்ட்ரிக் பேருந்துகளை விநியோகம் செய்ய டாடா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 200 எலெக்ட்ரிக் பேருந்துகளை வழங்க உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், டீசல் பேருந்துகளால் ஏற்படும் மாசுபாட்டை குறைத்து, பசுமை போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையினை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மேற்கொள்கிறது.

  இந்தியாவில் பயணிகள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் பேருந்துகள் ஜம்மு-காஷ்மீருக்கு வாங்கப்பட உள்ளது.

  இதற்காக ஜம்மு ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் டாடா மோடார்ஸ் நிறுவனத்தின் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டாடா நிறுவனம் வழங்கும் பேருந்துகள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் இயக்கப்பட உள்ளன.

  Read More : அடி தூள்! குறைவான விலையில் கிடைக்கும் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்கள்!

  பேருந்தின் அளவு எவ்வளவு

  9 மீட்டர் நீளம் கொண்ட 150 எலெக்ட்ரிக் பேருந்துகளை வழங்க உள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோன்று 12 மீட்டர் நீளத்தில் 50 எலெக்ட்ரிக் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதன்மை செயலாளர் அருண் மேத்தா கூறுகையில், “தூய்மையான பொதுப் போக்குவரத்து தேவை என்ற மாபெரும் இலக்கின் ஒரு பகுதியாக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதி மக்களுக்கு பசுமை போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது.

  இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், எங்களது பொதுப் போக்குவரத்து வசதிக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று குறிப்பிட்டார். வெறுமனே போக்குவரத்து அம்சமாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்துவதாக எலெக்ட்ரிக் பேருந்துகள் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

  இந்தியா முழுவதிலும் எலெக்ட்ரிக் பேருந்துகளை விநியோகம் செய்யும் டாடா நிறுவனம்

  ஜம்மு-காஷ்மீர் பகுதியில் டாடா நிறுவனத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட 40 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதேபோன்று நாடு முழுவதிலும் 700 எலெக்ட்ரிக் பேருந்துகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

  அண்மையில் டெல்லியில் 1,500 எலெக்ட்ரிக் பேருந்துகளை விநியோகம் செய்ய டாடா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதேபோன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு 1,180 எலெக்ட்ரிக் பேருந்துகளையும், பெங்களூருவுக்கு 921 எலெக்ட்ரிக் பேருந்துகளையும் விநியோகிக்க டாடா நிறுவனம் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

  எலெக்ட்ரிக் பேருந்துகளால் என்ன லாபம்

  டீசல் பேருந்துகளில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சுப்புகை பெருமளவில் வெளியேறுகிறது. அதேபோன்று டீசல் பேருந்துகளின் இயக்கச் செலவுகளும் அதிகமாக உள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் பேருந்துகளில் நச்சுவாயு வெளியேற்றம் என்பதே முற்றிலுமாக கிடையாது. அத்துடன் இயக்க செலவுகளும் சற்று குறைவு என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் அரசு நிறுவனங்களுக்கு கூடுதல் பணம் மிச்சமாகும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Automobile, Electric Buses, Jammu and Kashmir