கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழுஊரடங்கு அமலில் உள்ளது. தீவிர கட்டுப்பாடுகளும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றானது பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிட்டது. தந்தை, தாய், கணவன், மகன், பிள்ளைகளை இழந்து பல குடும்பங்கள் தவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி பல குடும்பங்கள் தவித்து வருகிறது. இதில் வருமானம் ஈட்டும் நபரின் மரணங்கள் அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு அவரது ஓய்வு காலம் வரை சம்பளத் தொகையில் பாதியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாலாஜி கூறுகையில், “கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 20 மாத சம்பளத்தை உடனடி நிவாரணமாக வழங்குவதோடு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து மாதம் 50 சதவிகிதம் அவரது பணி காலம் முடியும் வரை வழங்கப்படும்.
தற்போது எங்கள் நிறுவனத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 90 சதவிகித ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். ஊழியர்களுக்கான மருத்துவ சேவையும் வழங்குகிறோம். ஊழியருக்கும் அவரை சார்ந்திருப்போருக்கும் ஒரு விரிவான காப்பீடு திட்டம் எங்களிடம் உள்ளது” என்றார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 47 ஊழியர்களை இழந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.