Home /News /national /

ஃபோர்டு இந்தியாவின் உற்பத்தி ஆலையை ரூ.726 கோடிக்கு வாங்கிய டாடா மோட்டார்ஸ்

ஃபோர்டு இந்தியாவின் உற்பத்தி ஆலையை ரூ.726 கோடிக்கு வாங்கிய டாடா மோட்டார்ஸ்

சனந்த் ஆலையை கையகப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் என்பது 4 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India
ஃபோர்டு இந்தியாவின் சனந்த் ஆலையை ரூ. 726 கோடிக்கு வாங்க டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு மோட்டார்ஸின் உற்பத்தி ஆலையை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 726 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நேற்று கையெழுத்திட்டது. இந்திய வாகன உற்பத்தியாளரின் துணை நிறுவனமான Tata Passenger Electric Mobility Ltd (TPEML) மற்றும் Ford India Pvt Ltd (FIPL) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் நிலம், சொத்துக்கள் மற்றும் தகுதியுள்ள அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் நிலையில், தற்போது ஃபோர்ட்-ஐ கையகப்படுத்தல் என்பது சரியான நேரமாகும், அதுமட்டுமின்றி இது அனைத்து பங்குதாரர்களுக்கும் வெற்றி தரும் என நம்புகிறோம்’ என குறிப்பிட்டது.

மேலும், சனந்த் ஆலையை கையகப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் என்பது 4 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக லாபம் ஈட்டுவதற்காக போராடி, கடந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியபோது, ​​ஃபோர்டு இந்திய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வாகன சந்தையில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published:

Tags: Ford, Tata motors

அடுத்த செய்தி