மத்திய அரசின் FAME II திட்டத்தின் கீழ் மும்பை போக்குவரத்து கழகத்துக்கு ஏசி வசதியுடன் கூடிய 35 மின்சார ஸ்டார் பஸ்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் FAME இந்தியா திட்டத்தின் கீழ் டாடா நிறுவனம் பல்வேறு மாநில அரசுகளுடன் மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. 340 மின்சார பேருந்துகள் வழங்க மும்பை போக்குவரத்து கழகமான Brihanmumbai Electric Supply and Transport (BEST) உடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, டாடா நிறுவனம் ஏற்கனவே 26 அதிநவீன ஏசி மின்சார பேருந்துகளை கடந்த ஆண்டு வழங்கியது. தற்போது இரண்டாவது கட்டமாக 35 ஏசி மின்சாரப் பேருந்துகளை டாடா நிறுவனம் பெஸ்ட் போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.
Also Read:
2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
இந்தப் பேருந்துகளின் தயாரிப்பு, விநியோகம், பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் டாடா நிறுவனத்தின் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் எஞ்சிய பேருந்துகளை அந்த நிறுவனம் வழங்க உள்ளது. டாடா ஸ்டார் பஸ்ஸைப் பொறுத்த வரை மின்சார வசதியில் இயங்கும் இந்தப் பேருந்துகளில் ஏசி வசதி உள்ளது. 12 மீட்டர் நீளமும், 35 சீட்டுகளும் இருக்கும். அட்வான்ஸ் மெக்கானிஸத்துடன் ஸ்டார்பஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

tata electric bus
ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப லிப்ட் மெக்கானிஸம் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும். விசாலமான உட்புற அமைப்புகளுடன், சார்ஜிங் போர்ட்டல்கள், அவசர கால வெளியேறும் பாதை உள்ளன. ஐ.டி.எஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் ரிஜெனரேட் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்டார் பஸ்கள் , அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் வகையில் டாடா நிறுவனம் பல்வேறு பகுதிகளில் கடுமையான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது.
Also Read:
ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய வீரர்களுக்கு இலவச விமானப் பயணம்
பெஸ்ட் போக்குவரத்து கழகத்தின் பொதுமேலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் லோகேஷ் சந்திரா பேசும்போது, டாடா நிறுவனத்திடம் இருந்து மேலும் 35 பேருந்துகளை கொள்முதல் செய்திருப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். வரும் காலங்களின் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள அவர், புகை வெளியேற்றம் குறையும் எனத் தெரிவித்தார்.
Also Read:
Lionel Messi | கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி.. முடிவுக்கு வந்த 21 ஆண்டுகால பயணம்!
மின்சார பேருந்துகள் பயன்பாடுகள் அதிகரிக்கும்போது அனைத்து வகைகளிலும் மும்பை மக்களுக்கு பயனுள்ளதாக இந்த திட்டம் அமையும் எனவும் லோகேஷ் சந்திரா தெரிவித்தார். டாடா நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோகித் ஸ்ரீவஸ்தவா பேசும்போது, மும்பைக்கு மின்சார ஏசி பேருந்துகளை தரமான தயாரிப்பு மற்றும் முன்னோடி அம்சங்களுடன் வழங்குவதில் டாடா மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
கிரியேடிவ் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் ஸ்டார் பஸ்ஸில் இடம்பெற்றிருப்பதாகவும், சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதில், இந்த பேருந்துகளின் பயன்பாடு தொடக்கப்புள்ளியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குறைந்த பராமரிப்பு செலவு, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் தரமான தொழில்நுட்பங்கள் டாடா ஸ்டார் பஸ்ஸில் இருப்பதாக தெரிவித்துள்ள டாட்டா நிறுவனம், இந்த பேருந்துகளுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் மும்பையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.