ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா குழுமம்?

ஏர் இந்தியா

நூறு விழுக்காடு பங்குகளையும் மத்திய அரசு விற்பதால் அதனை முழுமையாக வாங்க டாடா குழுமம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. ஒப்பந்தப்புள்ளிகளை சமர்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், அதை டாடா குழுமம் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

  நூறு விழுக்காடு பங்குகளையும் மத்திய அரசு விற்பதால் அதனை முழுமையாக வாங்க டாடா குழுமம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மலேசிய நிறுவனமான ஏர் ஏசியாவின் பெரும்பான்மையான பங்குகளை டாடா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக டாடா குழுமத்துக்கு கைமாறும் என்று கூறப்படுகிறது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: