Home /News /national /

ரூ.98 கோடிக்கு மும்பையில் சொகுசு வீடு வாங்கிய டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன்! 

ரூ.98 கோடிக்கு மும்பையில் சொகுசு வீடு வாங்கிய டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன்! 

N Chandrasekaran

N Chandrasekaran

N Chandrasekaran | டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆடம்பரமான மும்பை பகுதியில் ஒரு சொகுசு டூப்ளக்ஸ் வீட்டை வாங்கியதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை நிமித்தமாக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்க வேண்டி இருப்பதால், நகரின் ஆடம்பரமான பகுதியில் அசத்தலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதன் விலை தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகா மாறியுள்ளது.

மும்பையின் பெடர் சாலையில் உள்ள ஆடம்பரமான டவரில் டாடா குழுமத் தலைவர் ரூ.98 கோடி மதிப்பில் வீடு வாங்கியுள்ளார். ஜஸ்லோக் மருத்துவமனைக்கு அருகே தெற்கு மும்பையில் அமைந்துள்ள 28 மாடி கொண்ட அப்பார்ட்மென்ட்டில் 11 மற்றும் 12வது மாடியை சேர்த்து டியூப்லெக்ஸ் வீடாக வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற பிறகு சந்திரசேகரன் செய்த முதல் அதிக தொகை தனிப்பட்ட பரிவர்த்தனை இதுவாகும்.

சந்திரசேகரனும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த டூப்ளெக்ஸில் அப்பார்ட்மெண்டில் தான் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர். இரண்டு தளங்களையும் சேர்த்து சுமார் 6,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டையே தற்போது என்.சந்திரசேகரன் சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த அப்பார்ட்மென்ட்-ன் பெயர் 33 சௌத் என அழைக்கப்படுகிறது.

என்.சந்திரசேகரன் சில ஆண்டுகளாக மாதம் சுமார் 20 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளார். பிப்ரவரி 21, 2017 அன்று டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பணிநிமித்தமாக 33 சவுத் அப்பார்ட்மெண்டுக்கு மாறியுள்ளார்.



பரிவர்த்தனை அறிக்கையின்படி, பில்டர் சமீர் போஜ்வானியின் கட்டுப்பாட்டில் ஜிவேஷ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று நிறுவனத்திடம் இருந்து சதுர அடிக்கு ரூ. 1.6 லட்சம் வீதம் 98 கோடி ரூபாய் வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு என்.சந்திரசேகரன், அவரது மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவ் ஆகியோரது பெயரில் புதிய வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட் 2008ம் ஆண்டு போஜ்வானி மற்றும் வினோத் மிட்டல் ஆகியோரால் கட்டப்பட்டது.

Also Read : 87ஆவது வயதில் 10வது பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்

டாடா குழுமம் பிப்ரவரி 20, 2027 வரையில் டாடா சன்ஸ் சேர்மனாக அறிவித்து பதவி நீட்டிப்பு செய்துள்ள நிலையில் மாத வாடகைக்கு இருந்த வீட்டை தற்போது சந்திரசேகரன் வாங்கியுள்ளார். சந்திரசேகரன் 2021 நிதியாண்டில் சுமார் ரூ. 91 கோடி வருடாந்திர சம்பளத்துடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் தலைவராக உள்ளார். டாடா குழுமம் சமீபத்தில் வாங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் என்.சந்திரசேகரன் நியமிக்கப்படுவார் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: India, Trending

அடுத்த செய்தி