தெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம்

கோவா நீதிமன்றம் இந்த வழக்கை இன்னும் ஆறு மாத காலத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 19, 2019, 7:22 PM IST
தெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது- உச்சநீதிமன்றம்
தருண் தேஜ்பால்
Web Desk | news18
Updated: August 19, 2019, 7:22 PM IST
தெஹல்கா பத்திரிகையின் நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பெண் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு ஜாமினில் வெளிவந்தார். அதன் பின்னர் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குற்றச்சம்பவம் கோவாவில் நடைபெற்றதால் கோவா நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் மிதான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் கோவா நீதிமன்றம் இந்த வழக்கை இன்னும் ஆறு மாத காலத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் பார்க்க: 10 லட்சம் விவசாயிகளுடன் மெகா மாநாடு... எஸ்பிஐ வங்கி ஏற்பாடு!

வண்ணமயமாக காட்சியளித்த கடல் அலை!
First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...