இஸ்லாமியர் வீட்டில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நிகழ்வு.. விளம்பரத்தை எதிர்க்க #BoycottTanishq என ட்ரெண்டான இண்டர்நெட் வெறுப்பு..

இஸ்லாமியர் வீட்டில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நிகழ்வு விளம்பரத்தை எதிர்க்க #BoycottTanishq என ட்ரெண்டானது. சசி தரூர் உட்பட பலரும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இஸ்லாமியர் வீட்டில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நிகழ்வு.. விளம்பரத்தை எதிர்க்க #BoycottTanishq என ட்ரெண்டான இண்டர்நெட் வெறுப்பு..
இணைய வெறுப்புக்காக பயன்படுத்தப்பட்ட தனிஷ்க் விளம்பரம்
  • Share this:
இஸ்லாமியர் வீட்டில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நிகழ்வு  நடத்துவதாக எடுக்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லரி விளம்பரத்தை லவ் ஜிஹாத் விளம்பரம் எனக்கூறி இணையத்தில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தீபாவளிக்காக ஏகத்வம் என்னும் புதுவகையான நகை வகைகளை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில், இஸ்லாமிய குடும்பத்தில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்தும் வகையிலும், உங்களின் பழக்கத்தில் இவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லையே என மருமகள் கேட்கும்போது, மகள்களை மகிழ்ச்சியாக வைக்கும் பண்பாடு அனைத்து குடும்பத்திலும் இருக்கிறதே என இஸ்லாமியரான அவரது மாமியார் தெரிவிப்பதுபோல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

அன்பைப் பரப்பும் விதமாக இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டதாக தனிஷ்க் விளக்கம் கொடுத்தும், இணையத்தில் ஒரு தரப்பினரும், வலதுசாரிகளும் இதை தொடர்ச்சியாக லவ் ஜிஹாத் என விமர்சித்து வெறுப்பை பரப்பி வந்த நிலையில், தற்போது அந்த விளம்பரத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கியிருக்கிறது தனிஷ்க் நிறுவனம்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading