ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடியரசு தினம்: டெல்லியை கலக்கிய தமிழ்நாடு ஊர்தி.. எழுந்து நின்று கைதட்டிய பெண்கள்!

குடியரசு தினம்: டெல்லியை கலக்கிய தமிழ்நாடு ஊர்தி.. எழுந்து நின்று கைதட்டிய பெண்கள்!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி

தமிழ்நாடு ஊர்தி அணிவகுக்கும்போது, அன்னையும் பிதாவும் முன்னணி தெய்வம், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பன வரிகள் இடம்பெற்றிருந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் தேசிய கொடிகளை ஏற்றிவைத்தனர். டெல்லியில் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதனையடுத்து அனைத்து மாநில ஊர்திகளும் கடமை பாதையில் அணிவகுப்பு நடத்தின.

மகாராஷ்ட்ரா வாகனத்திற்கு பிறகு அணிவகுத்த தமிழ்நாடு வாகனம், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் பெண்களை போற்றி பறைசாற்றி அணிவகுத்தது. ஔவையாரையும், எம்.எஸ் சுப்புலட்சுமி சிலைகளை தாங்கி தமிழ்நாட்டின் ஊர்தி அணிவகுத்தது. அந்த ஊர்தி அணிவகுக்கும்போது, அன்னையும் பிதாவும் முன்னணி தெய்வம், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பன வரிகள் இடம்பெற்றிருந்தன.

' isDesktop="true" id="879271" youtubeid="OkGrS8jJPJo" category="national">

இந்த ஊர்தி அணிவகுத்து சென்ற பிறகு பார்வையாளர்கள் மிகவும் உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்களில் இருந்த பெண் ஒருவர் எழுந்து நின்று தமிழ்நாட்டை சேர்ந்த ஊர்திக்கு தனது பாராட்டை தெரிவித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.


First published:

Tags: Delhi, PM Narendra Modi, President Droupadi Murmu, Republic day