ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழக வீரர்களுக்கு விருதுகள்.. சரத் கமலுக்கு கேல் ரத்னா.. பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

தமிழக வீரர்களுக்கு விருதுகள்.. சரத் கமலுக்கு கேல் ரத்னா.. பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

சரத் கமல், இளவெனில் வாலறிவன், ப்ரக்யாநந்தா

சரத் கமல், இளவெனில் வாலறிவன், ப்ரக்யாநந்தா

பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவும் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டில் விளையாட்டுத் துறைக்கான உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

  இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய விளையாட்டு அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

  அதன்படி, இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வாகியுள்ளார்.

  இவர், இந்த ஆண்டில் நடைபெற்ற பர்மிங்ஹாம் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி என 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இதனை கவுரவிக்கும் வகையில் தற்போது கேல் ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.

  அத்துடன், மனிகா பத்ராவுக்குப் பிறகு, டேபிள் டென்னிசில் இருந்து கேல் ரத்னா விருது வெல்லும் இரண்டாவது நபராகியுள்ளார். மேலும், விஸ்வநாதன் ஆனந்த், மாரியப்பன் வரிசையில் கேல் ரத்னா விருது வெல்லப்போகும் தமிழர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

  பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர் (news18.com)

  இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்துக்காக விளையாடி வரும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன்-க்கும் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

  பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவும் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளார். மேலும், மல்யுத்த வீராங்கனைகள் அன்ஷு, சரிதா, பேட்மின்டன் வீரர்கள் லக்ஷ்யா சென், பினராய் உட்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  அத்துடன், சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது ஜிவன்ஜோத் சிங் , முகமது அலி கமர், சுமா சித்தார்த் மற்றும் சுஜீத் மான் ஆகிய 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  வாழ்நாள் சாதனையாளருக்கான தியான்சந்த் விருது அஸ்வினி அக்குஞ்சி, தரம்வீர் சிங், பி.சி.சுரேஷ், நிர் பகதூர் குருங் ஆகிய 4 பேருக்கு வழங்கப்பட உள்ளது. டெல்லியில் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்க உள்ளார்.

  வல்லபாய் படேல் பெயரை உச்சரிக்க கூட காங்கிரஸுக்கு உரிமையில்லை - அமித் ஷா ஆவேசம்! (news18.com)

  இந்நிலையில், கேல் ரத்னா விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமல் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  அத்துடன், பிரக்ஞானந்தா, இளவேனில் மற்றும் 17 வயதான ஜெர்லின் அனிகா ஆகிய மூன்று பேரும் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளது தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்னுவதற்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Arjuna Award, CM MK Stalin, Sports