மக்களவையில் தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்!

மக்களவையில் தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்!
தயாநிதி மாறன்
  • Share this:
17வது மக்களவையில் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிறபகல் 12 மணியளவில் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.

நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமியும், அவரைத் தொடர்ந்து சுமதி - தமிழச்சி தங்கப்பாண்டியனும் பதவியேற்றனர்.

மூன்றாவதாக தயாநிதி மாறன் எம்பியாக பதவியேற்கும் போது தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று முழக்கமிட்டு பதவியேற்றார்.


தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற வீசிக வேட்பாளர் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.

இவர்களைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதமசிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னரசு, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.

அடுத்ததாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பரயன், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி கே.சண்முக சுந்தரம், திண்டுக்கல் எம்.பி.வேலுசாமி பதவியேற்றனர்.அடுத்ததாக காங்கிரஸ் காட்சி , கரூர் தொகுதி நாடாளுனன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பதவியேற்றனர்.

பின்னர் பெரம்பலூர் நாடாளுனன்ற உறுப்பினர் பாரிவேந்தர், கடலூர் நாடாளுனன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், விசிக கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.

தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுனன்ற உறுப்பினர் ராமலிங்கம், நாகபட்டினம் நாடாளுனன்ற உறுப்பினர் செல்வராஜ், தஞ்சாவூர் நாடாளுனன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சிவகங்கை நாடாளுனன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மதுரை நாடாளுனன்ற உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.

பின்னர் அதிமுக சார்பாக தேனி நாடாளுனன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமார் பதவியேற்றுக்கொண்டர். தொடர்ந்து விருதுநகர்நாடாளுனன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் , ராமநதபுரம் நாடாளுனன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, தூத்துக்குடி நாடாளுனன்ற உறுப்பினர் கனிமொழி, தென் காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.
Video:
First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்