ஹோம் /நியூஸ் /இந்தியா /

'அதிக தொழிற்சாலைகள்'.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கை

'அதிக தொழிற்சாலைகள்'.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கை

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில், 15.7 சதவீத தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய புள்ளிவிவரங்கள் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில்,ரிசர்வ் வங்கி தொழிற்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2020-21ம் நிதியாண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக 38,837 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில், 15.7 சதவீத தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.  தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் 28,479 தொழிற்சாலைகளுடன் குஜராத் மாநிலம் இருக்கிறது.

25,610 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம், மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் 16,924 தொழிற்சாலைகளும், உத்தர பிரதேசத்தில் 16,184 தொழிற்சாலைகளும் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மாநிலம்தொழிற்சாலைகள்சதவீதம்
தமிழ்நாடு38,83715.7 %
குஜராத்28,47911.5 %
மகாராஷ்டிரா25,61010.3 %
ஆந்திரா16,9246.8 %
உத்தர பிரதேசம்16,1846.5 %

2030-ம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், மாநிலத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.

First published:

Tags: Gujarat, Maharashtra, RBI data, Tamilnadu