Home /News /national /

ஷாப்பிங் மாலில் விற்கப்படும் தமிழக அரசின் விலையில்லா சேலைகள்...!

ஷாப்பிங் மாலில் விற்கப்படும் தமிழக அரசின் விலையில்லா சேலைகள்...!

சலுகை விலையில் விற்கப்படும் இலவச சேலை

சலுகை விலையில் விற்கப்படும் இலவச சேலை

  • News18
  • Last Updated :
    திருப்பதியில் உள்ள சி.எம்.ஆர் ஷாப்பிங் மால் துனிக்கடையில் தமிழக அரசின் விலையில்லா சேலைகள் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

    ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சி.எம்.ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான ஷாப்பிங் மால்கள் உள்ளன.

    சிஎம்ஆர் நிறுவனத்தின் ஷாப்பிங் மால்களில் ஜவுளி, தங்க வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இரண்டு மாநிலங்களில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் சிஎம்ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான துணிக்கடைகளில் தமிழகத்தில் அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் விலையில்லா சேலைகள் தள்ளுபடி விலையில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

    திருப்பதியில் உள்ள சி.எம்.ஆர் ஷாப்பிங் மால் துணிக்கடையில் 196 ரூபாய் அதிகபட்ச சில்லரை விலை குறிப்பிடப்பட்டுள்ள விலையில்லா சேலையை 98 ரூபாய் தள்ளுபடி போக 98 ரூபாய்க்கும், 146 ரூபாய் அதிகபட்ச சில்லரை விலை குறிப்பிடப்பட்டுள்ள விலையில்லா சேலையை 38 ரூபாய் தள்ளுபடி போக 108 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்கின்றனர்.
    Published by:Sankar
    First published:

    Tags: Tirupathi

    அடுத்த செய்தி