ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் இதைத்தான் வேண்டிக்கொண்டேன் - அண்ணாமலை

திருப்பதியில் இதைத்தான் வேண்டிக்கொண்டேன் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai : நடந்து மலை ஏறி சென்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதிக்கு சென்றார். பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து மலையேறி சென்ற அவர் இரவு திருமலையில் தங்கினார். இந்நிலையில் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அண்ணாமலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலையை பக்தர்கள் குறிப்பாக தமிழக பக்தர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்து கொண்டனர். அப்போது, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அண்ணாமலையை பார்த்து அவருடன் பேசி கைகுலுக்கி செல்பி எடுத்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ அருள் புரியவேண்டும் என்று வேண்டி கொண்டேன். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட தக்க எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பி வைக்கும்” என்றும் கூறினார்.

First published:

Tags: Annamalai, BJP, India, Tirupathi