Home /News /national /

கடன்பாக்கி... இனி மின்சாரம் வாங்க தடை... தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்?

கடன்பாக்கி... இனி மின்சாரம் வாங்க தடை... தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாடு, தெலுங்கானா, ம.பி., மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஆகஸ்ட் 19 முதல் மின்சார வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கி தொகை செலுத்தாததால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    தமிழ்நாடு, தெலுங்கானா, ம.பி., மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஆகஸ்ட் 19 முதல் மின்சார வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மின்சாரம் விநியோக நிறுவனங்கள்(discoms) மற்றும் மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள்(gencos) நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக மின் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் (எல்பிஎஸ்) விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 19 (நாளை)  முதல் அமலுக்கு வரும்.

    இதையும் படிங்க: 8 மாதங்களாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்திய கும்பல்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

    LPS விதிகள்படி,  ஏழு மாதங்களுக்கும் மேலாக ஜென்கோஸுக்கு  டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. இந்தச் செய்தி இந்திய எரிசக்தி பரிவர்த்தனையை (IEX) அழுத்தத்திற்கு உள்ளாக்கியது, ஏனெனில் IEX இல் வர்த்தகம் செய்யப்படும் அளவுகள் விரைவில் பாதிக்கப்படலாம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Electricity, Powercut, Stock market

    அடுத்த செய்தி