கணவருக்காக காத்திருந்த தமிழிசை - ஆளுநர் பதவியேற்பின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கணவருக்காக காத்திருந்த தமிழிசை - ஆளுநர் பதவியேற்பின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஆளுநராக பதவியேற்கும் தமிழிசை

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் போது ஒரு சில நிமிடங்கள் அவர் தாமதித்தார்.

 • Share this:
  தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பதவிவகித்த கிரண்பேடிக்கு எதிராக அம்மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு புகார் தெரிவித்தார். அதனையடுத்து, கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவித்தார் ராம்நாத் கோவிந்த். அதனையடுத்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்க்கு கூடுதலாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனையடுத்து, இன்று காலையில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தர்ராஜன் பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.

  குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் எனக் கூறப்படும் கடிதத்தை தமிழிசை சவுந்தர்ராஜன் கையில் கொண்டுவரவில்லை. தலைமை நீதிபதி படிக்கத் தயாரானபோது அந்த கடிதத்தை தேடினார். அது தன்னிடம் இல்லை என்பதும் மேஜையில் இருப்பதை உணர்ந்து அவர் தனது கணவரான டாக்டர் சௌந்தரராஜனிடம் தெரிவித்தார்.

  உடனடியாக டாக்டர் சௌந்தரராஜன் உள்ளே சென்று அந்த வாரண்ட் பேப்பரை எடுத்து வந்தார். அதற்குள் ஆளுநரின் செயலர் தன்னிடம் ஒரு நகல் இருப்பதாக குறிப்பிட்டார். இதனால் "அவரை கூப்பிடுங்க" என இரண்டுமுறை தமிழிசை கூறினார். அதற்குள் டாக்டர் சௌந்தரராஜன் வந்து வாரன்ட் காப்பியை கொடுத்தார். கணவருக்காக காத்திருந்த பிறகுதான் அவர் துணை ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: