தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!

Tamilisai Soundararajan | தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெயரையும் தமிழிசை பெற்றுள்ளார்

news18
Updated: September 8, 2019, 11:12 AM IST
தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!
தமிழிசை
news18
Updated: September 8, 2019, 11:12 AM IST
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில், தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் இரண்டாவது ஆளுநர் என்ற பெயரை தமிழிசை பெற்றுள்ளார்.

மேலும், தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெயரையும் தமிழிசை பெற்றுள்ளார். இன்று காலை ஹைதராபாத் சென்ற தமிழிசையை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.


இதனை அடுத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். பின்னர் கார் மூலம் ராஜ்பவன் சென்ற அவருக்கு, ராஜ் பவன் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

ராஜ் பவனின் தமிழிசை அம்மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். ஆந்திரா மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.Loading...

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர், அவர் அமைச்சரவைக் குழுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்க மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பதவியேற்றதும் மேடையின் கீழே இருந்த தனது தந்தை குமரி அனந்தன், தாய் ஆகியோரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் தமிழிசை.

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...