Home /News /national /

நான் தன்னிச்சையாக செயல்படவில்லை தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன் - விமர்சனங்களுக்கு தமிழிசை பதிலடி

நான் தன்னிச்சையாக செயல்படவில்லை தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன் - விமர்சனங்களுக்கு தமிழிசை பதிலடி

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

கவர்னர் என்றாலே விமர்சனம் செய்கிறார்கள் நான் கவலை பட வில்லை. இருப்பினும் நாராயணசாமி அண்ணன் தெரிந்து கொண்டு பேச வேண்டும். - தமிழிசை

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது. இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை கல்வெட்டுகளை பதித்தார். சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா வீர சாவக்கர், திருநெல்வேலி வேலு நாச்சியார் ஆகியோரின் கல்வெட்டுகளை தமிழிசை பதித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழிசை தன்னிச்சையாக செயல்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் தன்னிச்சையாக செயல்படவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன் என தமிழிசை பதிலளித்தார். தமிழிசை பொய் கவர்னர் என நாராயணசாமி கூறியுள்ளாரே...? என கேட்டதற்கு,அட கடவுளே..! எங்கே பொய் சொன்னேன் என தேடி தேடி பார்க்கனும்..நான் மெய்யாக வேலை செய்கிறேன்..தீயாய் வேலை செய்கிறேன்.மக்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள்.அவர் ஏதோ விமர்சனம் செய்வதற்காக பேசுகிறார்.

முதல்ல இருந்த கவர்னரை நெடில் (பேய்) என போட்டு இருந்தார். அதனால் என்னை குறில் (பொய்) போட்டு கூறியுள்ளார்.அவருக்கு கவர்னர் என்றாலே இப்படி விமர்சனம் செய்கிறார்.நான் கவலை பட வில்லை. இருப்பினும் நாராயணசாமி அண்ணன் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

Also Read:  அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்

நான் மாற்றத்திற்கான ஊக்கியாக செயல்படுகிறேன். அவர் தாக்கியாக தான் செயல்பட விரும்புகிறார். இதுபோன்ற விமர்சனங்கள் வேண்டாம் என்றார். சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ள முடியுமா என்று இருந்த நிலையில் வேலு நாச்சியாரை போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மரியாதைக்குரிய குடியரசு தலைவரும் பெண் வீராங்கனைகள் பற்றி சொல்லும் போது அவரைப் பற்றி நினைவு கூர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்தவர் வந்திருப்பது அத்தனை பேருக்கும் நம்பிக்கை அளிக்கிறது என்றும் தமிழிசை தெரிவித்தார். மகாகவி பாரதியாருக்கு வானுயர சிலை வைக்க சுற்றுலா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Narayanasamy, Pudhucherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி