ஹோம் /நியூஸ் /இந்தியா /

'சித்தர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆன்மீகவாதிகளுக்கு புதுச்சேரி தாய்மடி' - தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம்

'சித்தர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆன்மீகவாதிகளுக்கு புதுச்சேரி தாய்மடி' - தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம்

 தமிழிசை சௌந்தரராஜன்

 தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai Soundararajan | புதுச்சேரி மண்ணிலும் காற்றிலும் அரவிந்தரும், அன்னையும், பாரதியும், பாரதிதாசனும் கல்ந்திருக்கிறார்கள் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சித்தர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும், ஆன்மீகவாதிகளும் எல்லாருக்கும் அடைக்கலம் தரக்கூடிய தாயின் மடியாக புதுச்சேரி இருந்திருக்கிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியச் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா மற்றும் சுதந்திர இந்தியாவின் முத்திரைத் திருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ அரவிந்தர் புகைப்படக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஆசிரம கண்காட்சி இல்லத்தில் நடைபெறுகிறது.

இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். முதலமைச்சர்  ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர்  லட்சுமி நாராயணன், செய்தித்துறைச் செயலர் வல்லவன், செய்தித்துறை இயக்குனர்  வினையராஜ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநர் ஆற்றிய உரையில், புதுச்சேரி பூகோள ரீதியாக ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் சரித்திரத்தில் மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது. சித்தர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும், ஆன்மீகவாதிகளும் எல்லாருக்கும் அடைக்கலம் தரக்கூடிய தாயின் மடியாக புதுச்சேரி இருந்திருக்கிறது. பாரதியார் பல இடங்களுக்கு சென்று சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டாலும் புதுச்சேரிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

வாஞ்சிநாதன் போன்றவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கான கனலை புதுச்சேரியில் இருந்து எடுத்துச் சென்றார்கள்.  புதுச்சேரி ஒரு சிறந்த துணைநிலை மாநிலமாக திகழ வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். இத்தகைய கண்காட்சிகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

குழந்தைகளும் இளைஞர்களும், இந்த நாட்டிற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த அளவுக்கு பாடுபட்டார்கள் என்று தெரிந்து கொள்ள உதவும்.  நம்முடைய இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரவிந்தர் மன அமைதி மற்றும் உடல்பலம் கலந்த யோகாவைப் பற்றி குறிப்பிடுகிறார். பாரதப் பிரதமர், ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக அறிவித்து இந்தியாவின் யோக கலையை உலகம் முழுவதுக்குமான கலையாக மாற்றினார். நம் நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியம் உலகம் முழுவதும் பரவியது. யோகா உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் மனதை கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

மனம் அமைதியாக இருந்தால் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உடலும் உள்ளமும் நன்றாக இருக்க வேண்டும். அதற்கான பல கருத்துக்களை அரவிந்தர் சொல்லி இருக்கிறார். பாரதிக்கும் அரவிந்தருக்கும் இருக்கும் தொடர்பு மிக நெருக்கமானது. பாரதியார் புதுச்சேரியில் இருக்கும் போதுதான் பல நல்ல கவிதைகளை நமக்கு கொடுத்திருக்கிறார். புனித நூல்களை எல்லாம் அவர் மொழிபெயர்த்தது புதுச்சேரி மண்ணில்தான் என்று கூறுகிறார்கள். இந்த மண்ணிலும் காற்றிலும் அரவிந்தரும், அன்னையும், பாரதியும், பாரதிதாசனும் கலந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் |  'திமுக அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஊழல் செய்கின்றது' - பாஜக தலைவர் அண்ணாமலை

 சுதந்திர உணர்வும் கலந்திருக்கிறது.75-வது சுதந்திர ஆண்டைக் குறிப்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நிகழ்வின்போதும் சுதந்திரப் போராட்டம் குழந்தைகளுக்கு நினைவூட்டப்படுகிறது.

நினைவூட்டப்படும்போது குழந்தைகள் நாட்டுப் பற்றோடு இருப்பார்கள். நாம் கடுமையாக போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வளரும். இதனை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இத்தகைய நிகழ்வுகளின் நோக்கம். புதுச்சேரி மக்கள் அனைவரும் கண்காட்சியை கண்டு பயன் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan