அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்
அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்
தமிழிசை சௌந்தரராஜன்
Tamilisai : இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். - தமிழிசை
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது. இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை கல்வெட்டுகளை பதித்தார்.சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா வீர சாவக்கர், திருநெல்வேலி வேலு நாச்சியார் ஆகியோரின் கல்வெட்டுகளை தமிழிசை சௌந்தரராஜன் பதித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் , இந்த தியாக சுவர் குழந்தைகளுக்கு தேச உணர்வை ஊட்ட வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பாரதப்பிரதமர் வருவது மகிழ்ச்சி. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம். போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை.
Immensely honoured in mounting names of freedom fighters on "Thiyaga Perunjuvar"(tribute wall for freedom fighters) at Gandhi Thidal #Puducherry.
I am sure that this will inculcate a sense of patriotism & pride of being Indian among children & adults alike.#AzadiKaAmrtiMohotsavpic.twitter.com/qDmnWU2D2b
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 27, 2022
தமிழகத்தைச் சார்ந்தவள் என்று மட்டும் அல்லாமல் இந்தியக் குடிமகன் என்ற வகையிலும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.