தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், “தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வாரம்” டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்திர்ராஜன் இன்று பங்கேற்று உரையாற்றினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் கலாச்சாரம் குறித்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி. காசிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நமது தமிழ் கலாச்சாரத்தின் இணைப்பை பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க : அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப்படை... விரட்டியடித்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ
அதே போல் டெல்லியில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் மூலம் மற்ற மொழி பேசும் மாணவர்களும் தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முடியும். மாநிலத்திற்கு உள்ளேயே தமிழின் பெருமையை பேசுவதைவிட மற்ற மாநிலங்களுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும்போது மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழை கற்கும் ஆசை வரும்.
நாமும் பிறமொழிகளை கற்க வேண்டும். நம் தமிழ்மொழியை மற்றவர்களும் கற்க வேண்டும். இதுவே எனது கோரிக்கையாகும். உலக சாஸ்திரங்கள் எல்லாம் தமிழ் மொழியில் வேண்டும் என பாரதியார் கேட்டார். அதுபோல் நாம் மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு மொழியின் அவசியம் உணர்ந்து அவரவர்களுக்கு எந்த மொழிகள் தேவையோ அதை கற்க வேண்டும்.
ஒரு மொழியை கற்க அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும். மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை மொழி திணிப்பு என தவறாக முன்னிறுத்துகிறார்கள். அது தவறு. நமது இனிய தமிழ் மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றார்.
உதயநிதி அமைச்சரானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.