தெலங்கானா பயணத்தின்போது, ராஜ்பவனிற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர
மோடியை தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.
வரவேற்பின்போது, இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீஅரவிந்தரைப் பற்றிய 75 தகவல்கள் அடங்கிய புத்தகத்தைப் பரிசளித்தார். மேலும், பாரதப் பிரதமர் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தான் எழுதிய புத்தகத்தையும் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் தனது செயல்பாடுகள் குறித்த புத்தகங்களையும் பிரதமரிடம் வழங்கினார்.
அவற்றுடன், தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டத்தில், 400 வருட பாரம்பரியம் கொண்ட, புவிசார் குறியீடு பெற்ற " செரியாழ்" வண்ண ஓவியத்தையும், பழங்குடியின மக்கள் பயன்படுத்திய "கொண்டா" என்ற பாரம்பரிய விளக்கையும் நினைவு பரிசாக வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாரதப் பிரதமர், தெலுங்கானா ராஜ்பவனில் தங்கியிருந்து புதுதில்லி செல்வதற்கு முன்பாக ராஜ்பவன் வளாகத்தில் மருத்துவ குணமுடைய கடம்பா மரக்கன்றை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியின்போது தெலுங்கானா மாநிலத்தின் பாரம்பரிய விழாவான போனாலு, பதுக்கம்மா விழாக்கள் அழகிய வண்ணக்கோலமாக வரையப்பட்டிருந்ததைப் பற்றி ஆளுநர் பிரதமரிடம் விளக்கி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.