விழிப்புணர்வு ஏற்படுத்த பழங்குடி மக்களுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழிசை சௌந்தரராஜன்

தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இரண்டாவது தடுப்பூசியை தமிழிசை சௌந்தரராஜன் செலுத்திக்கொண்டுள்ளார்.

  • Share this:
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் உள்ளார்.  கொரோனா தொற்று பரவிவரும் நிலையில்,  கொரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்புசி செலுத்த வேண்டும் என்று இலக்கும் நிர்ணயித்துள்ளார்.  அதற்காக நடவடிக்கைகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.  அவ்வப்போது தடுப்பூசி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.  இந்நிலையில்,  தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளை தேடி சென்று கொரோனா தடுப்பூசி: அசத்தும் புதுச்சேரி அரசு!


அதன்படி, தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மகேஷ்வரம் மண்டல், கே.சி.மண்டா என்ற கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்த கிராமத்தை 100% தடுப்பூசிசெலுத்தப்பட்ட கிராமமாக மாற்றவும் அங்கு வாழும் மக்களுடன் தனது இரண்டாவதுகொரோனா தடுப்பூசியை தமிழிசை சௌந்தரராஜன் இன்று செலுத்திக்கொண்டார்.
Published by:Murugesh M
First published: