படேல் சிலைக்கு பெயர் “ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி” ? 😳

Statue of Unity என்ற ஆங்கில வாசகத்தை தமிழில் தவறாக ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று எழுதியுள்ளனர். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

யுவராஜ் வெ | news18
Updated: October 31, 2018, 8:53 AM IST
படேல் சிலைக்கு பெயர் “ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி” ? 😳
தமிழில் தவறாக எழுதப்பட்ட வாசகம்
யுவராஜ் வெ | news18
Updated: October 31, 2018, 8:53 AM IST
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சா்தாா் வல்லபாய் படேலின் சிலை, குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்டாமக அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான இந்த சிலைக்கு ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை காண வருவோருக்கு ஏதுவாக Statue of Unity என்ற ஆங்கில வாசகத்தை மொழி பெயர்த்து பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள் 5ம், வெளிநாட்டு மொழிகள் 5 என பத்து மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் இருக்க, அதனை மொழி பெயர்த்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறிப்பாக தமிழில், மொழிபெயர்க்காமல் ஒலி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. அதுவும் தவறாக ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று எழுதியுள்ளனர். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

Loading...கூகுள் மொழிபெயர்ப்பு கருவியில் மொழி பெயர்த்தாலே சரியான வாக்கியம் கிடைத்திருக்குமே என்று பலரும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தவறாக எழுதப்பட்டிருந்த தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர்.படேல் சிலை திறப்பு விழாவிற்கு தமிழகம் சார்பாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்களேன்:
First published: October 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்