Home /News /national /

‘காசு கொடுக்காமல் காரியம் நடக்காது’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

‘காசு கொடுக்காமல் காரியம் நடக்காது’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் உத்தரப்பிரதேசம் மாநில அரசுத்துறைகளில் லஞ்சம், ஊழல் அதிகமாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18
  • Last Updated :
    நாடு முழுவதும் 15 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் உத்தரப்பிரதேசம் மாநில அரசுத்துறைகளில் லஞ்சம், ஊழல் அதிகமாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் இரண்டாம் இடமும், தமிழகம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

    அரசுத்துறைகளில் புழங்கும் லஞ்சம், ஊழல் குறித்து ‘சர்வதேச இந்திய ஊழல் ஆய்வு’ என்ற அமைப்பு 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் இரண்டாம் இடமும், தமிழகம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

    லஞ்சம் கொடுத்தால் அரசு அலுவலகத்தில் வேலை நடக்கிறது என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 59% மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது என பஞ்சாபில் 56% பேரும், தமிழகத்தில் 52% பேரும் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்களில்தான் அதிகளவில் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 30% லஞ்சம் காவல்துறைக்கும், 27% லஞ்சம் உள்ளாட்சி துறைக்கும், 27% லஞ்சம் பத்திரப்பதிவு துறைக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் 30% லஞ்சம் பத்திரப்பதிவு துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்திரப்பதிவு, போக்குவரத்து, வரி அலுவலகங்கள் ஆகியவற்றில்தான் அதிக ஊழல் புழங்குவதாக அதிகமானோர் கூறியுள்ளனர். ஒட்டுமொத்த ஆய்வில் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது என 22% பேரும், வேலை வேகமாக நடக்க பணம் கொடுக்கப்படுகிறது என 36% பேரும், 50% பேர் அலுவலகங்களில் லஞ்சத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், 34% பேர் லஞ்சம், ஊழலை தடுக்க அரசு சில நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
    Published by:Sankar
    First published:

    Tags: Bribe, Corruption, Government office, Police, Punjab, Registration, Tamilnadu, Uttar pradesh

    அடுத்த செய்தி