மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்தில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு குறித்து குழுவை அமைத்து அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால், இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தமிழக அரசும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கின் விசாரணையின்போது, இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.