கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: நிதின் கட்கரி

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: நிதின் கட்கரி
நிதின் கட்கரி
  • News18
  • Last Updated: May 27, 2019, 8:25 AM IST
  • Share this:
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று  நிதின் கட்கரி கூறியுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் பாஜக தொண்டர்களிடையே பேசிய நிதின் கட்கரி, தமிழகம்-கர்நாடகா இடையே நிலவும் பிரச்னையை தீர்க்கும் வகையில் கோதாவரியை காவிரியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்


தற்போது தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

4 தென் மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை விரைவில் நடவடிக்கை எடுக்கும். இந்த திட்டம் 60,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். கோதாவரி நதியில் இருந்து 1,100 டிஎம்சி நீர் கடலில் வீணாவது தடுக்கப்படும் என்று கூறினார்.

நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் நன்றிநிதின் கட்கரியின் அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும், இதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீரும் என்றும் முதலமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் கோதாவரி உருவாகிறது

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் திரிம்பர்க் பகுதியில் உருவாகும் கோதாவரி ஆறு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரா என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே, போலாவரம் அணை கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு, 1,100 டி.எம்.சி., நீர், கோதாவரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கிறது.

அதை விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த கோதா வரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம், 60,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. நாகார்ஜூன சாகர் அணையில் இருந்து 300 டிஎம்சி தண்ணீர் கிருஷ்ணா நதியில் உள்ள போலாவரம் அணைக்கட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கர்நாடகாவில் பெண்ணாற்றில் உள்ள சோமசீலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டிற்கு கோதாவரி தண்ணீர் கொண்டுவரப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் பயன்பெறும்

இதன்மூலம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். கால்வாய்கள் வெட்டி தண்ணீர் கொண்டு வந்தால் தண்ணீர் வீணாவதோடு, திட்ட நிதியும் அதிகரிக்கும் என்பதால், ஸ்டீல் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.60,000 கோடி திட்ட நிதியில் 90% மத்திய அரசும், 10% நிதி  மாநிலங்களும் செலவிடும்

அறுபதாயிரம் கோடி திட்ட நிதியில் 90 விழுக்காடு மத்திய அரசும், பத்து விழுக்காடு நிதி இந்த திட்டத்தால் பயன்பெறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் செலவிடும். மேலும் இந்த திட்டத்திற்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தோ, பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பயன் பெறும். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களும் பயன்பெறும்.

திட்டத்தை உடனடியாக செயல்படுத்த விவசாயிகள் வேண்டுகோள்

இந்நிலையில் நமது செய்தியாளரிடம் பேசிய விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, அறிவிப்போடு நில்லாமல் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஆற்று நீர் விலைக்கு விற்கும் நிலை வரும் என்று பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது சாத்தியமா என்றும் கேள்வி முன்வைக்கப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்தினாலே தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துவிடும் என்று கூறுகிறார் சாமி நடராஜன்.

இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Also see... உயிரை துச்சமென கருதி மாடியில் ஏறி மாணவர்களை தீயில் இருந்து காப்பாற்றிய ஹீரோ!

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading