ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் 8 மாவட்டங்களில் 10%க்கும் அதிகமாக தொற்று - மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் 8 மாவட்டங்களில் 10%க்கும் அதிகமாக தொற்று - மத்திய சுகாதாரத்துறை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 320 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 விழுக்காடுக்கு அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

  கடந்த வாரம் வரை தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரம் பேர் வரை பதிவான நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றார்.

  இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 320 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்தார்.

  Also read... அதிகரிக்கும் கொரோனா - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்!

  இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 90 விழுக்காடு பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் லவ் அகர்வால் குறிப்பிட்டார்.

  Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

  ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ளவர்களுக்கு செல்போன்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  மகாராஷ்டிராவில், கொரோனாவின் 3வது அலை தொடங்கி விட்டதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். சிறப்பு குழுவில் இடம்பிடித்துள்ள டாக்டர் ராகுல் பண்டிட், டெல்லி மற்றும் மும்பையில் கொரோனா பெரிய அளவில் பரவி வருகிறது என்றார்.

  பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்டா, ஒமைக்ரான் ஆகிய இரு வைரஸ்களும் இணைந்து தாக்கி வருவதே 3வது அலைக்கு காரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Corona, India