ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தி தெரியாததால் தமிழ் இளைஞருக்கு மும்பையில் நேர்ந்த அவமானம்

இந்தி தெரியாததால் தமிழ் இளைஞருக்கு மும்பையில் நேர்ந்த அவமானம்

தமிழில் பேசியதால் மும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பொறியாளர்

தமிழில் பேசியதால் மும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பொறியாளர்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசியதற்காக தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஆபிரகாம் சாமுவேல் டிவிட்டரில் புகார் கூறியிருந்தார்.

  • 1 minute read
  • Last Updated :

மும்பை விமான நிலையத்தில், இந்தி தெரியாததால், தமிழக இளைஞர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் தமிழில் பேசியதால்,  தடுத்து நிறுத்தப்பட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

ஆபிரகாம் சாமுவேல் என்ற பயோடெக்னாலஜி பொறியாளர், மும்பை விமான நிலையத்தின் 33வது கவுன்டரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசியதற்காக தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக டிவிட்டரில் புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது தவறு இருந்தால், அவருக்கு மறுபயிற்சி அளிக்கப்படும் என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.

Published by:Yuvaraj V
First published:

Tags: Mumbai, Mumbai Airport