ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆந்திராவில் தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.. ட்விட்டரில் திருமாவளவன் கண்டனம்!

ஆந்திராவில் தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.. ட்விட்டரில் திருமாவளவன் கண்டனம்!

ஆந்திராவில் தமிழர்கள் மீது தாக்குதல்

ஆந்திராவில் தமிழர்கள் மீது தாக்குதல்

இந்த சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி அருகே வடமாலைபேட்டை சுங்கச் சாவடியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் படித்து வரும் தமிழக மாணவர்கள் சுமார் 50 பேர், இன்று நடைபெற்ற தேர்வை எழுதிய பிறகு, கார்களில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் வடமாலைப்பேட்டை என்ற இடத்தில் தேசிய சுங்கச்சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்துவதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்கள் வந்த கார் ஒன்றை அடித்து நொறுக்கினர். மாணவர்களை அவர்களை தட்டிக் கேட்ட போது, அங்கு ஒன்று திரண்ட உள்ளூர் பொதுமக்களும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக சேர்ந்து, மாணவர்களை தாக்கத் தொடங்கினர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, தமிழக சட்ட மாணவர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று கண்டனப் போராட்டம் நடத்தவும் சட்டக் கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க: பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா.. தம்பதிகளின் அந்தரங்கத்தை படம்பிடித்து மிரட்டிய 4 பேர் கைது

  இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு விசிக தலைவரும், மக்களவை எம்பியுமான திருமாவளவன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் "ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினையடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்கப்பட்டவர்களின் நிலை தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Andhra Pradesh, Students, Tamils