• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

தமிழக விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் போராட்டம்

பாரம்பரிய வேட்டி-சட்டையுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை கண்டித்து, டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஹரியானா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் 8 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நேரில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில்கள் மூலம் டெல்லிக்கு வந்தனர். அவர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பாரம்பரிய வேட்டி-சட்டையுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால், சிறிது தூரத்திலேயே போலீசாரும், துணை ராணுவப்படையினரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், விவசாயிகள் சிறிதுநேரம் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சி எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத்தலைவர் ரவீந்திரன் மற்றும் சிவதாசன் (கேரளா) மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு விவசாயிகள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு, டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஏற்கனவே போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் சேர்ந்து இவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கே ஒருவாரம் தங்கியிருந்து போராடம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Must Read : தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை... பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்?

    இந்நிலையில், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை நரேந்திர மோடி அரசு நிறைவேற்றாததால் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் போராட்டம் நடந்து வருகிறது. இங்கே வந்திருக்கும் விவசாயிகளை மிரட்டுகிற வகையில் ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து நடக்க விடாமல், உட்கார விடாமல், நிற்கக்கூட விடாமல் விரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் விவசாயிகள் அஞ்சப்போவது இல்லை. இந்த சட்டங்கள் கிழித்து எறியப்படும்வரை போராட்டம் தொடரும்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என்றும் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: