Home /News /national /

திருப்பதி மலை அடிவாரத்தில் தமிழக பக்தர்கள் போராட்டம்...

திருப்பதி மலை அடிவாரத்தில் தமிழக பக்தர்கள் போராட்டம்...

Tirupathi

Tirupathi

டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    சாமி தரிசனத்திற்காக பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள் டிக்கெட் இல்லாத காரணத்தால் திருப்பதி மலைக்கு செல்ல இயலாத நிலையில் மலையடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மாலை திருப்பதிக்கு வந்தனர்.

    மாலை போட்டு விரதம் இருந்து இருமுடி தாங்கி பாதயாத்திரையாக வந்த பக்தர்களில் பலரிடம் சாமி தரிசனத்திற்கு தேவையான டிக்கெட் இல்லை ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத நிலையில் அவர்கள் எப்படியாவது திருப்பதியில் இருந்து திருமலைக்கு சேர்ந்துவிடலாம் என்று வந்திருந்தனர். ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி டிக்கெட் இல்லாத பக்தர்களை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

    எனவே அவர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    Also read:  Hyundai நிறுவனத்தின் பாகிஸ்தான் ஆதரவு பதிவுக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு.. ட்ரெண்டிங்கில் #BoycottHyundai

    இதனால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து டிக்கெட்டுகளுடன் வந்திருந்த பக்தர்களை மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல அனுமதித்தனர்.

    இந்த நிலையில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்த தேவஸ்தானம் பக்தர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    புஷ்பராஜ் - செய்தியாளர், திருப்பதி
    Published by:Arun
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati temple

    அடுத்த செய்தி