ஹோம் /நியூஸ் /இந்தியா /

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை... வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை... வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

CM letter for Fisherman | இந்த ஆண்டில் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  அந்த கடிதத்தில் புதன்கிழமை இரவு நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்ததாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதாகவும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

  மேலும் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவது இந்தியாவுக்கு ஒரு சவால் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,

  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Also see....இன்று இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  இதற்கிடையே கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வருகிற 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இலங்கை கடற்படையால் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 1 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  மீனவர்கள் 14 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CM MK Stalin, Fisherman, Navy, Srilanka