தமிழிசை சௌந்தர்ராஜன் மாற்றப்படுவாரா? இல.கணேசன் விளக்கம்

பா.ஜ.கவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதன் விளைவாகவே அமைப்புரீதியாக நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். 

news18
Updated: May 26, 2019, 6:36 PM IST
தமிழிசை சௌந்தர்ராஜன் மாற்றப்படுவாரா? இல.கணேசன் விளக்கம்
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
news18
Updated: May 26, 2019, 6:36 PM IST
மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா முடிந்த பிறகு தமிழக பா.ஜ.க தலைமை மாற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்துள்ளது. எனவே, தமிழக பா.ஜ.க தலைமை மாற்றப்படுமா? என்று கேள்வி எழுந்தது.

இந்தநிலையில், நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ‘கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே, பா.ஜ.கவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதன் விளைவாகவே அமைப்புரீதியாக நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.

தேர்தல் முடிவு குறித்து இன்னும் ஆய்வு செய்யவேண்டும். டெல்லி பிரதிநிதிகள் சென்னை வர இருக்கிறார்கள் அந்த கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆலோசிப்போம். ராஜ்யசபா எம்.பி பதவியை நான் கேட்டுப் பெறுவதில்லை. யாருக்கு என்ன தேவை என்பதை தலைமை அறியும்.

கட்சித் தலைமை என்னை எம்.பியாக அறிவித்தால், அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளேன். தமிழகத்தின் பா.ஜ.க தலைமை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே மாற்றப்பட்டிருக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைமைகளும், மோடி பதவியேற்ற பின்னர் செயற்குழு கூட்டம் கூடி முறையாக மாற்றப்படும்.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

Also see:
Loading...
First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...