கேரள நிவாரணப் பணிகளில் அசத்தும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள்!

கேரள நிவாரணப் பணிகளில் அசத்தும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள்!
மூட்டைகள் தூக்கிச் செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜாமாணிக்கம் மற்றும் உமேஷ் கேசவன்
  • News18
  • Last Updated: August 16, 2018, 4:21 PM IST
  • Share this:
கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழகத்தை பூர்விகமாக கொண்ட  ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜமாணிக்கம் மற்றும் உமேஷ் கேசவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கேரளாவில் பெய்து வரும்  பருவமழை காரணமாக மாநிலமெங்கும் பல மாவட்டங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்துள்ளனர்.

முப்படையின் பாதுகாப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள வயனாடு மாவட்டத்தின் கலெக்டர் ராஜமாணிக்கம், சப் கலக்டர் உமேஷ் கேசவன்ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர்கள் இருவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வெள்ள நிவாரண பொறுப்பு அதிகாரியாக கலக்டர் ராஜமாணிக்கம்  மற்றும் அவருக்கு உதவியாக வயநாடு சப் கலெக்டர் உமேஷ் இருவரும் நியமிக்கப்பட்டு முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். நேற்று பகல் முழுவதும் வெள்ளச்சேத பணிகளை பார்வையிட்டு விட்டு நள்ளிரவில் வயநாடு கலெக்டர் அலுவலகம் வந்த போது ஒரு டெம்போ நிறைய நிவாரணப்பொருட்களுடன் வாகனம் நிற்பதை கண்டு இருவரும் விசாரித்தனர்.


இறக்குவதற்கு ஆள் இல்லாமல் நிற்பதாகவும் , இன்னும் ஒரு டெம்போ நிவாரணப்பொருள் மீதமுள்ளதாக கூற தங்களது களைப்பையும் பொருட்படுத்தாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரும் தலையிலும் , தோழிலும் சுமந்து முழுவதும் இறக்கிவிட்டு டெம்போவை திருப்பியனுப்பிய நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று வருகிறது.

 


நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கம் மற்றும் கேசவன்

நிவாரணப் பணிகளை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் சப் கலெக்டர் உமேஷ் கேசவன், நியூஸ்-18 க்கு அளித்த பேட்டியில் “கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு, பல பேர் வீடுகளை இழந்துள்ளனர். வயநாடு மாவட்டத்தில் பல இடங்களில் தாழ்வான பகுதிகள் இருப்பதால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பேர் வீடுகளை இழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.


நிவாரணப் பணிகளை பார்வையிடும்  ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம் 

மேலும், 145-க்கும் அதிகமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 23,000-ம் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான உணவுகள், குளிர் அதிகமாக இருப்பதால் போர்வைகள், ஸ்வெட்டர்கள், பெண்களுக்கு நாப்கின்கள் ஆகியவை தேவைப்படுவதாகவும், அனைத்து இடங்களிலும் உதவிகள் வந்து கொண்டிருப்பதாகவும் உமேஷ் தெரிவித்தார்.

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கம் மற்றும் கேசவன்

இந்நிலையில், தமிழகத்திலிருந்தும் உதவிகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த உமேஷ், தமிழகத்தின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா ஐஏஎஸ்-ன் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், நிவாரணப் பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கமும், உமேஷ் கேசவனும் தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்தும், நிவாரண பொருட்களின் தேவைகள் குறித்தும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
First published: August 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading