• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சாமி தரிசனத்திற்காக திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் : போராட்டம்... கைது

சாமி தரிசனத்திற்காக திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் : போராட்டம்... கைது

திருப்பதியில் பக்தர்கள் போராட்டம்

திருப்பதியில் பக்தர்கள் போராட்டம்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து சாமியின் அருளைப் பெற தமிழகம் உள்ளிட்ட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருப்பதி செல்வது வழக்கம்.

  • Share this:
    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான, இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் சீனிவாசம் வளாகத்தில் உள்ள டோக்ன் கவுன்டர் மூடப்பட்டதால், இலவச தரிசன டோக்கனை நேரில் வாங்கச் சென்ற தமிழக பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்தனர். டோக்கன் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட அரியலூரைச் சேர்ந்த 15 பேர் உட்பட பலரை கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, வாக்குவாதம் செய்ததுடன், அவர்கள் சலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்தப் பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் வேதனை பட்டு வந்தநிலையில், சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருமாலுக்கு உகந்த மாதமான புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து சாமியின் அருளைப் பெற தமிழகம் உள்ளிட்ட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருப்பதி திருமலைக்குச் செறு “கோயிந்தா... கோயிந்தா...” என்ற கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்து நிம்மதி அடைவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பத்திர்கள் திருப்பதிக்குச் சென்றனர்.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும் அறிவித்த திருப்பதி தேவஸ்தானம், சீனிவாசம் வளாகத்தில் உள்ள இலவச தரிசன டோக்ன் கவுன்டரில் டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று மாலையே விற்றுத் தீர்ந்ததால் டோக்கன் கவுண்டரை இழுத்து மூடியது. இந்நிலையில், இலவச தரிசன டோக்கனை நேரில் வாங்க வந்து ஏமாற்றம் அடைந்த ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை வரை திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டரில் டோக்கன் வாங்கி சாமி தரிசனம் செய்ய முடியாமல் பத்தர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். முறையான அறிவிப்பு இன்றி கவுண்டரை தேவஸ்தானம் மூடியதாக பக்தர்கள் குற்றம் சாட்டினார். ஆவேசம் அடைந்த பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அத்துடன், சீனிவாசம் கட்டிடம் எதிரில் இருக்கும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்தள், இலவச தரிசன டோக்கடை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பக்தர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி சிலரை மட்டும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    கட்ந்த புதன் கிழமை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நாளை (செப்டம்பர் 25ஆம் தேதி) முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும். இதனால் திருப்பதி உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும் என்று அறிவித்திருந்தனர்.

    Must Read : திருப்பதி செல்ல இந்த சர்டிபிகேட் அவசியம் : தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

    அத்துடன், இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும். மேலும், இம்மாதம் 24ஆம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில்ளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: