• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தி தவிர மாநிலங்களவையில் மொழிகளில் தமிழ் மொழிக்கு என்ன இடம்? பட்டியல் வெளியீடு!

இந்தி தவிர மாநிலங்களவையில் மொழிகளில் தமிழ் மொழிக்கு என்ன இடம்? பட்டியல் வெளியீடு!

மாநிலங்களவை (கோப்புப்படம்)

மாநிலங்களவை (கோப்புப்படம்)

மாநிலங்கள் அவை கூட்டத்தின் போது இந்தி மற்றும் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளாக இருந்தாலும், 2020-ல் இந்தி தவிர்த்து, 21 பிற திட்டமிடப்பட்ட இந்திய மொழிகளின் பயன்பாடு ஐந்து மடங்கு அதாவது 512% -ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீப காலமாக மாநிலங்களவை (Rajya Sabha) கூட்டத்தில் பிராந்திய மொழிகளின் (regional languages) பயன்பாடு ஐந்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும் 2018-20ம் ஆண்டு காலத்தில் மாநிலங்கள் அவையில் முதல் முறையாக திட்டமிடப்பட்ட 22 மொழிகளில் 10 மொழிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். அதிலும் தமிழ் மக்களவையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நான்காவது இந்திய மொழியாக உருவெடுத்துள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் பேச திட்டமிடப்பட்ட 22 மொழிகளில் இந்தி, தெலுங்கு, உருது, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய பிராந்திய மொழிகள் முன்னிலை வகித்துள்ளன.

2018-20ம் ஆண்டுகளில் மொத்தம் நடைபெற்ற 163 அமர்வுகளில் அதாவது மாநிலங்களவை கூட்டத்தில், பிராந்திய மொழிகள் 135 முறை பயன்படுத்தப்பட்டன. விவாதங்களில் 66 தலையீடுகள் (interventions), 62 ஜீரோ ஹவர் (Zero Hour) மற்றும் ஏழு சிறப்பு குறிப்புகளில் (Special Mentions) பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, திட்டமிடப்பட்ட 22  மொழிகளில் டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி மற்றும் சாந்தாலி போன்ற மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நான்கு மொழிகளும் 1952ம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக மாநிலங்களவையில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 2018 ஆம் ஆண்டில் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் உத்தரவின் பேரில் இந்த நான்கு மொழிகளுக்கும், அதனுடன் சிந்தி என்ற மொழிக்கும் ஒரே நேரத்தில் விளக்க சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தவிர, அஸ்ஸாமி, போடோ, குஜராத்தி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி போன்ற ஆறு மொழிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டுள்ளன என்று மாநிலங்களவை ஆவணம் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

மாநிலங்கள் அவை கூட்டத்தின் போது இந்தி மற்றும் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளாக இருந்தாலும், 2020-ல் இந்தி தவிர்த்து, 21 பிற திட்டமிடப்பட்ட இந்திய மொழிகளின் பயன்பாடு ஐந்து மடங்கு அதாவது 512% -ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது, 2004-17 க்கு இடையிலான 14 ஆண்டு காலத்தில் பயன்படுத்தப்பட்டதை விட அதிகம். 2004 மற்றும் 2017 க்கு இடையில் நடைபெற்ற 923 அமர்வுகளின் போது 269 சந்தர்ப்பங்களில் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினர்கள் சபையில் இந்தி தவிர்த்து 10 திட்டமிடப்பட்ட மொழிகளில் பேசியுள்ளனர்.

இது ஒரு அமர்வுக்கு 0.291 என்ற விகிதத்தில் உள்ளது. அதுவே 2020ம் ஆண்டில், 33 அமர்வுகளின் போது ஒரு அமர்வுக்கு 1.49 என்ற விகிதத்தில் பிராந்திய மொழிகளின் தலையீடுகள் 49 ஆக இருந்தது. இது இந்தி தவிர்த்து பிற பிராந்திய மொழிகளின் பயன்பாடு 512 சதவீதமாக அதிகரித்திருப்பதை காட்டுகிறது. அதேபோல், 2013-17ம் ஆண்டு காலத்தில் நடைபெற்ற 329-க்கும் மேற்பட்ட அமர்வுகளில், மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தி தவிர்த்து பிற 10 பிராந்திய மொழிகளில் 96 முறை மட்டுமே பேசியுள்ளனர்.  இவை அனைத்தும் விவாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் 2024-ம் ஆண்டு தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும்: விவசாய அமைப்பினர் திட்டவட்டம்

மாநிலங்கள் அவையில் 2013-17 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த 329 அமர்வுகள் மற்றும் 2018-20 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த 163 அமர்வுகளில் இந்தி மொழியை தவிர்த்து பிராந்திய மொழிகள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டன என்பதை பார்ப்போம்.

பிராந்திய மொழிகள் : 2013-17 மற்றும் 2018-20

தமிழ் : 32 மற்றும் 18

தெலுங்கு : 19 மற்றும் 33

உருது : 19 மற்றும் 24

பெங்காலி  : 6 மற்றும் 17

சமஸ்கிருதம் : 0 மற்றும் 12

மராத்தி  : 3 மற்றும் 6

ஒடியா : 5 மற்றும் 6

கன்னடம் : 2 மற்றும் 5

பஞ்சாபி : 2 மற்றும் 3

மலையாளம் : 2 மற்றும் 0

அசாமி : 0 மற்றும் 2.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: