• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மத்தியில் இன்று 10-வது சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மத்தியில் இன்று 10-வது சுற்று பேச்சுவார்த்தை

லடாக்

லடாக்

கல்வான் எல்லையில் இந்திய படையினரே அத்துமீறியதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    இந்தியா, சினா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

    கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் 15 தேதி இரவில் கைகலப்பு ஏற்பட்டு பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் இரும்பு கம்பி, கற்களால் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். பதில் தாக்குதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை மறுத்து வந்த சீனா தற்போது, ஜூன் மாதம் நடைபெற்ற மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டுள்ளது. அவர்களது குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனா ராணுவம் கூறியுள்ளது. மேலும், கல்வான் எல்லையில் இந்திய படையினரே அத்துமீறியதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    பாங்காங் சோ பகுதியில் நிலைகொண்டிருந்த இந்தியா - சீனா நாட்டு படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. சீனா எல்லையில் உள்ள மால்டோ பகுதியில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாட்டு கமாண்டர்களும் விவாதிக்க உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: